தோக்கியோ: வடகொரியா ஏவுகணை சோதனை மேற்கொண்டால் அதன் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக ஜப்பான் பாவனைப் பயிற்சியை மேற்கொண்டு வந்தது. அந்தப் பயிற்சியை நிறுத்த ஜப்பான் தற்போது முடிவு செய்துள்ளது. சிங்கப்பூரில் நடந்த டிரம்ப்- கிம் சந்திப்புப்புக் பின்னர் ஜப்பான் இந்த முடிவை எடுத்துள்ளது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. வடகொரியா சென்ற ஆண்டு இரண்டு முறை ஜப்பானை நோக்கி ஏவுகணைகளை செலுத்தி சோதனை செய்தது. அதனைத் தொடர்ந்து ஜப்பான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தற்காப்புப் பயிற்சியை மேற்கொண்டது. வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே விரைவில் சந்தித்துப் பேசவுள்ளார்.
ஏவுகணை தற்காப்பு பயிற்சியை நிறுத்திய ஜப்பான்
1 mins read

