1எம்டிபி நிதி தொடர்பான தில்லு முல்லுகள் பற்றி முன்னாள் பிரதமர் திரு நஜிப் ரசாக்குக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை என்று பிரதமர் மகாதீர் முகம்மது குறிப்பிட்டார். 1எம்டிபி சம்பந்தப்பட்ட பத் திரங்களில் திரு நஜிப்பின் கையெழுத்து இருப்பதாக மகாதீர் கூறினார். இப்படி கையெழுத்திட்ட ஒரு வர், தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறுவதை நம்ப யார்தான் விரும்புவார் என்று மலாய் மெயில் செய்தித் தளத்திற்கு நேற்று அளித்த பேட்டியில் டாக்டர் மகாதீர் தெரிவித்தார். 1எம்டிபி தில்லுமுல்லு பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறு வனத்திற்கு அளித்த பேட்டியில் திரு நஜிப் கூறியதற்கு அளித்த பதிலில் பிரதமர் நேற்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"முதலில் கடனாகப் பெறப் பட்ட 42 பில்லியன் ரிங்கிட் தொகை (இன்றைய பரிவர்த்தணை விகிதத்தில் இந்தத் தொகை S$14.3 பில்லியன்) அனைத்தும் நஜிப்பின் கையெ ழுத்துடன் வந்து போயிருக்கிறது. இது அவருக்குத் தெரியவில்லை என்றால், கையெழுத்து என்றால் என்ன என்பதே அவருக்குப் புரிய வில்லை என்றுதான் அர்த்தம்," என்றார் டாக்டர் மகாதீர்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ராய்ட்டர்ஸ் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் 1எம்டிபி தில்லுமுல்லு பற்றி தனக்கு தெரியாது என்றார். படம்: ராய்ட்டர்ஸ்

