பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தோனீசியாவில் அமான் அப்துர் ரஹ்மான் என்னும் சமயத் தீவிரவாதிக்கு நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. பயங்கரவாதச் செயல்களுக்குத் திட்டமிட்டதற்காகவும் அத்திட்டங் களை நிறைவேற்ற பிறரைத் தூண் டியதற்காகவும் அந்த 46 வயது ஆடவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஐந்து நீதிபதி கள் அடங்கிய குழு நேற்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.
"சமய குருவாக இருந்த அமான் தமது சீடர்களை நேருக்கு நேர் சந்தித்தார் அல்லது தமது கருத்துகளை இணையத்தில் பரவ லாக வெளியிட்டார். எம்பி3 ஒலிக் குறிப்புகள், ஒலி அழைப்புகள் போன்றவற்றையும் அவர் வெளி யிட்டார்," என நீதிபதிகள் குழு வுக்குத் தலைமை ஏற்ற அக்மத் ஜைனி நீதிமன்றத்தில் தெரிவித் தார். கடந்த 2016ஆம் ஆண்டில் ஜகார்த்தாவில் நான்கு உயிர் களைப் பறித்த துப்பாக்கித் தாக்கு தல், தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் போன்றவை உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல் களைத் தூண்டிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அமானுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் அமான் அப்துர் ரஹ் மானை ஆயுதம் தாங்கிய பாதுகாப்புப் படையினர் ஜகார்த்தா நீதி மன்றத்திலிருந்து அழைத்துச் சென்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

