மலேசியா: உள்ளூர் சமையற்காரர்களை மட்டுமே உணவகங்கள் வேலைக்கு சேர்க்க முடியும்

மலேசியா: உள்ளூர் சமையற்காரர்களை மட்டுமே உணவகங்கள் வேலைக்கு சேர்க்க முடியும்

1 mins read

பெட்டாலிங் ஜெயா: வரும் ஜூலை முதல் தேதியிலிருந்து மலேசியாவில் உள்ள அனைத்து உணவகங்களும் உள்ளூர் சமையற்காரர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று மலேசிய அரசாங்கம் விரும்புவதாக மனித வள அமைச்சர் எம், குலசேகரன் தெரிவித்துள்ளார். இருப்பினும் உள்ளூர்க்காரர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்கு உணவகங் களுக்கு இவ்வாண்டு இறுதி வரையில் அவகாசம் அளிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

அனைத்து உணவகங்களிலும் உள்ளூர் சமையல்காரர்கள் அமர்த்தப்படுவதற்கு வகைசெய்யும் சட்டவிதிமுறை 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி அமலுக்கு வருகிறது. உள்ளூர்காரர்கள் சமையற்காரர்களாக வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும். அதை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் செய்தாக வேண்டும் என்று நேற்று திரு குலசேகரன் பெர்னாமாவிடம் கூறினார்.

மேலும் செய்திகள்