வாஷிங்டன்: அமெரிக்க எல்லை யில் கைது செய்யப்பட்ட சட்ட விரோத குடியேறிகளிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகள் தங்கி யுள்ள காப்பகத்திற்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப் சென்றிருந்தபோது அவர் உடுத்திருந்த சட்டை பலரை திகைப்படையச் செய்துள்ளது. "எனக்கு உண்மையிலேயே கவலை இல்லை," என்று ஆங் கிலத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம் இணையத்தளங்களில் பரவி வருகிறது.
இது தொடர் பாக கருத்துத் தெரிவித்த மெலானியாவின் பேச்சாளர் கிறிஸ்ஹாம் "அது வெறும் சட்டை தான். அதில் உள்ள வாசகத்திற்கு எந்த உள் அர்த் தமும் கற்பிக்க வேண்டாம். முக் கிய மாக அவர் குழந்தைகள் முகாமுக்குச் சென்றுள்ள நிலை யில், அவர் உடுத்தியுள்ள உடைமீ து ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ்

