அமெரிக்காவும் தென்கொரியாவும் மேலும் சில கூட்டு ராணுவப் பயிற்சிகளை காலவரையறை இன்றி நிறுத்திவைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான 'பென்டகன்' அறிவித்து ள்ளது. இம்மாதத் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் நடத்திய உச்சநிலைச் சந்திப் பிற்குப் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டதாக பென்டகன் வெள்ளிக்கிழமை கூறியது.
"சிங்கப்பூர் உச்சநிலைக் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகளை அமல்படுத்துவதற்கு ஆதரவாக வும் நட்பு நாடானா கொரிய குடியரசுடன் ஒத்து ழைக்கும் பொருட்டும் தற்காப்பு அமைச்சர் மேட்டிஸ் இந்தப் பயிற்சிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்," என பென்டகன் பேச்சாளர் டானா ஒயிட் குறிப்பிட்டு உள்ளார். "ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்ட 'ஃப்ரீடம் கார்டியன்' பயிற்சியோடு 'கேஎம்இபி' எனப்படும் கொரிய கடற்துறை பரிமாற்றத் திட்டத்தின்கீழ் அடுத்த மூன்று மாத காலத்தில் நடத்தப்பட இருந்த இரு பயிற்சி நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டவைகளுள் அடங்கும்," என்றார் அவர். இதன் தொடர்பில் கருத்துத் தெரிவித்து உள்ள தென்கொரிய தற்காப்பு அமைச்சு, "அடுத்த மூன்று மாதங்களுக்கும் நடத்தப்பட இருந்த இரண்டு கேஎம்இபி பயிற்சிகளை காலவரம்பின்றி தள்ளிவைக்க தென்கொரியாவும் அமெரிக்காவும் முடிவு செய்துள்ளன.

