சுமத்ராவில் டோபா ஏரியில் இந்தோனீசியப் படகு மூழ்கியதைத் தொடர்ந்து காணாமற்போனவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ள நிலையில் அந்த ஏரிக் கரையில் உறவினர்கள் குடும்பத்துடன் காத்திருக்கின்றனர். தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினரிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் காத்திருக்கின்றனர். மீட்புக் குழுவினர் சோனார் சாதனத்தைப் பயன்படுத்தி ஏரியின் அடிமட்ட ஆழத்தில் தேடி வந்தபோதிலும் அப்படகை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை 18 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். மூவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 193 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். பலர் அந்தப் படகினுள் இறந்து கிடக்கலாம் என அஞ்சப்படுவதாக அதிகாரி ஒருவர் கூறினார். படம்: ஏஎஃப்பி
இந்தோனீசிய படகு விபத்து: டோபா ஏரிக் கரையில் காத்திருக்கும் உறவினர்கள்
1 mins read
-

