பெட்டாலிங் ஜெயா: கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்கூட்டணியிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக கூட் டணிக் கட்சிகளில் ஒன்றான கெராக்கான் அறிவித்துள்ளது. தேசிய முன்னணி கூட்டணி யிலிருந்து வெளியேற கெராக்கான் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக முடிவு எடுத்ததாக அக்கட்சியின் மத்தியக் குழு தெரிவித்தது. செய்தியாளர்கள் கூட்டத்தில் அக்குழு இதனைத் தெரிவித்தது.
மலேசியாவின் 14வது பொதுத் தேர்தலுக்கு பிறகு நடந்த தற்போதைய அரசியல் நில வரத்தை கருத்தில்கொண்டு தீவிர, விரிவான விவாதத்திற்குப் பின்னர் இந்த முடிவு எடுக் கப்பட்டதாக கெராக்கான் மத்தியக் குழு தெரிவித்தது. கெராக்கான் கட்சி சுதந்திரமாக புதிய அரசியல் பயணத்தை தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அக்குழு குறிப்பிட்டுள்ளது.
புதிய எதிர்பார்ப்புகள், மக்களின் தேவைகள் இவற்றுக்கு ஏற்ப தேசிய முன்னணியிலிருந்து விலக முடிவு எடுத்ததாகவும் அக்குழு கூறியது. நல்ல புரிந்துணர்வு அடிப்படையில் தேசிய முன்னணியிலிருந்து கெராக்கான் வெளியேறுவதாகவும் எதிரணியில் ஒரு சுயேச்சை கட்சியாக கெராக்கான் விளங்கும் என்றும் மத்திய குழு தெரிவித்தது. மத்திய அரசியலமைப்புச் சட்டத்தை தற்காக்கவும் நிலை நிறுத்தவும் நாட்டின் நலனில் அக்கறையுள்ள தனிநபர்கள், குழுக்கள் மற்றும் ஒரே எண்ணம் கொண்ட மற்ற கட்சிகளுடனும் ஒத்துழைக்கத் தயாராக இருப் பதாகவும் கெராக்கான் கட்சி தெரிவித்துள்ளது. கெராக்கான் கட்சி தேசிய முன்னணி கூட்டணியில் கடந்த 40 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது.

