சவூதி அரேபியாவில் கார் ஓட்டிய முதல் பெண் சமர்

சவூதி அரேபியாவில் கார் ஓட்டிய முதல் பெண் சமர்

1 mins read
9f1637ef-e611-467a-9647-db42785fa6bd
-

ரியாத்: சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடை நீண்டகாலத் திற்குப் பிறகு நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து பெண்கள் முதல் முறையாக காரை ஓட்டி கொண்டு உல்லாசப் பறவைகளாக வலம் வந்தனர். சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணியைத் தொட்டதும் தயாராக இருந்த பெண்களின் கார்கள் உறுமின. ரியாத் நகரை புதிய உலகை சுற்றி வருவதுபோல சுற்றி வந்த ஒரு பெண், "எனது பெயர் சமர் அல் மோகிரென். தொலைக் காட்சியில் நிகழ்ச்சிகளை படைக்கிறேன்," என்று பெருமையுடன் கூறினார். "நீண்டகாலத்திற்கு முன்பு தொலைக்காட்சியில் எனது முகத்தைக் காட்ட முடிவு செய்தபோது முகத்திரையை எடுத்தேன். எனது சகோதரர்களுக்குப் பிடிக்க வில்லை. ஆனால் எனது தந்தை எனக்கு ஆதரவாக இருந்தார். அதுமட்டுமல்லாமல் என்னுடைய முக்கிய முடிவுகளிலும் அவர் ஆதரவாக இருந்தார். வெளிநாட்டில் நான் படிக்கவும் அவர்தான் ஊக்கமூட்டினார்," என்றார் சமர்.

மேலும்