பத்து மலை கோயில் முன் திடீர் ஆர்ப்பாட்டம்

பத்து மலை கோயில் முன் திடீர் ஆர்ப்பாட்டம்

1 mins read
c054c7a8-3945-4c94-aab6-69cc761622a0
-

கோலாலம்பூர்: மலேசியாவின் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் நிர்வாகக் குழு சீரமைக்கப்பட வேண்டும் என்று கோரி நேற்று நூற்றுக் கணக்கானோர் பத்து மலை கோயிலுக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 7.00 மணிக்கே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடத் தொடங்கினர். கோயிலின் நிர்வாகம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு முறைப்படுத்த வேண்டும் என்பது ஆர்ப்பாட்டக்காரர் களின் கோரிக்கையாகும். இதற்கிடையே ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு எதிராக மற் றொரு தரப்பினர் மறியலில் ஈடுபட்டதால் மோதல் ஏற் படக்கூடிய சூழ்நிலை ஏற் பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கோயிலின் வாயிற்கதவு மூடப்பட்டு பக்தர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. படம்: thestar

மேலும்