இஸ்தான்புல்: துருக்கியில் நடந்த தேர்தலில், நீண்ட காலமாக அந்நாட்டின் தலைவராக இருக்கும் ரிசெப் தாயிப் எர்டோகன் மீண்டும் வெற்றி பெற்றிருப்பதாக தேர்தல் ஆணை யம் அறிவித்தது. அதிகப் பெரும்பான்மையை அதிபர் ரிசெப் எர்டோகன் பெற் றுள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் சாடி குவென் தெரிவித் தார். 99 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் எர்டோகன் 53 விழுக்காடு வாக்கு களைப் பெற்றுள்ளதாகவும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முக்கிய வேட்பாளரான முஹர்ரம் இன்ஸ் 31 விழுக்காடு வாக்குளைப் பெற்றுள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் தோல்வியை எதிர்க் கட்சி அதிகாரபூர்வமாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் ஜனநாயகப் போராட்டத்தைத் தொடருவோம் என்று முக்கிய எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. அரசு ஊடகம் வெளியிட்ட தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருப்பதாக எதிர்கட்சி தெரிவித் துள்ளது. இந்நிலையில் அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை யன்று அறிவிக்கப்படவுள்ளன.
துருக்கியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன் தன் மனைவியுடன் சேர்ந்து கட்சி தலைமையகத்தில் ஆதரவாளர்களை வரவேற்றார். கடந்த 11 ஆண்டுகள் துருக்கி நாட்டின் பிரதமராக இருந்த எர்டோகன் 2014ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபரானார். புதிய அரசியலமைப்பு சட்டப்படி 2023 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் மூன்றாம் தவணைக்காலத்திற்கு அவர் போட்டியிட முடியும். படம்: ஏஎஃப்பி

