வாஷிங்டன்: அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளை வழக்கு விசாரணை இன்றி உடனடியாக அவர்களின் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் டுவிட்டர் பக்கத்தில் தெரி வித்துள்ளார். ''அமெரிக்காவில் சட்ட விரோதமாக சிலர் நுழையும் பட்சத்தில், நீதிபதிகள் அல்லது நீதிமன்ற வழக்குகள் ஏதும் இன்றி, அவர்களின் சொந்த நாட்டிற்கே அவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். அவர்கள் நம் நாட்டை ஆக்கிரமிப்பு செய்வதை நாம் அனுமதிக்க முடியாது," என்று திரு டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க எல்லையில் கைது செய்யப்படும் சட்டவிரோத குடியேறிகளிடமிருந்து அவர் களின் பிள்ளைகளைப் பிரித்து தனியாக ஓரிடத்தில் அடைத்து வைக்கும் கொள்கைக்கு பலர் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து பிள்ளைகளைப் பிரிக் கும் திட்டத்தை திரு டிரம்ப் கைவிட்டார். கைது செய்யப்படும் பெற்றோர் களையும் பிள்ளைகளையும் ஒரே இடத்தில் வைக்க திரு டிரம்ப் உத்தரவிட்டார். "பெற்றோரை பிரிந்து குழந்தைகள் தனியாக அடைத்து வைக்கப்படும் காட்சி யைக் காண எனக்குப் பிடிக்க வில்லை'' என்று குறிப்பிட்ட அவர், ஆனால் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வரும் யாரையும் சட்டப்படி தண்டிப்பது மற்றும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தனது நிர்வாகம் எவ்வித சகிப்புத்தன்மையும் காட்டாது என்று கூறியிருந்தார்.

