கோலாலம்பூர்: புக்கிட் பிந்தாங்கிலுள்ள ஓர் இரவு விடுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடுநடத்தியதாக போலிசார் தெரிவித்துள்ளனர். அந்த இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு விடுதியை நோக்கி 25 முறை சுட்டதாக குற்றப் புலனாய்வுத்துறை தலைவர் ருஷ்டி முகம்மட் இசா தெரிவித்தார். அந்த துப்பாக்கிச் சூட்டில் நல்லவேளையாக யாரும் காயம் அடையவில்லை என்று அவர் சொன்னார்.
வாகன நிறுத்துமிடத்திலிருந்து சுடப்படும் சத்தத்தைத் தான் கேட்டதாக சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒருவர் கூறினார். கார்நிறுத்துமிடப் பகுதியில் சிதறிக் கிடந்த 25க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக ருஷ்டி முகம்மட் இசா சொன்னார். அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்ற இருவரை போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் புலன் விசாரணை நடைபெறுவதாகவும் திரு இசா தெரிவித்தார்.

