மாண்டரின் மொழியில் அறிக்கை வெளியிட்ட நிதி அமைச்சர் மீது புகார்

மாண்டரின் மொழியில் அறிக்கை வெளியிட்ட நிதி அமைச்சர் மீது புகார்

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய நிதி அமைச்சர் லிம் குவான் எங் மாண்டரின் மொழியில் அறிக்கை வெளியிட்டதையடுத்து அவரை பலர் குறை கூறி வருகின்றனர். மலேசியாவில் அதிகாரத்துவ மொழியாக மலாய் மொழி இருக்கும்போது அவர் மாண்டரின் மொழியில் ஏன் அறிக்கை வெளியிட வேண்டும் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். திரு லிம் வெளியிட்ட அறிக்கை பண்பற்ற செயல் என தான் கருதுவதாக ஜோகூர் அம்னோ பிரிவு தலைவர் முகமட் காலிட் நூர்தின் கூறியுள்ளார்.

திரு லிம் மாண்டரின் மொழியில் அறிக்கை வெளியிட்டதை கடுமையாகச் சாடிய வழக்கறிஞர் அஸ்ஹார் ஹருண், ஒரு முறை திரு லிம் "நான் சீனர் அல்ல; நான் ஒரு மலேசியர்," என்று பெருமையாகக் கூறிக்கொண்டதை தற்போது சுட்டிக் காட்டினார். இந்நிலையில் திரு கைரி ஜமாலுதின், மாண்டரின் மொழியில் அறிக்கை வெளியிடுவதை நிதி அமைச்சர் தற்காத்துப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். "அந்த அறிக்கை அனைத்துலக மக்களுக்காக விடுக்கப்பட்ட ஒன்று என்றால் அதை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கலாம். மாண்டரின் மொழியை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லையே," என்று திரு கைரி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்