பேஙகாக்: தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு குகைக்குள் சிக்கியிருக்கும் காற்பந்துக் குழுவைச் சேர்ந்த இளையர்களை 12 பேரை மீட்க முடியும் என்ற புதிய நம்பிக்கை மீட்புக் குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது. அக்குகைக்குள் செல்லக்கூடிய புதிய நுழைவாயிலை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். உள்ளூர் குடியிருப்பாளர்களுடன் சேர்ந்து மீட்புக் குழுவினரும் புதிய நுழைவாயில் வழியாக உள்ளே செல்ல முயன்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
குகைக்குள் சிக்கிக்கொண்டவர்கள் பாதுகாப்பாக வெளியில் வர உறவினர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். குகையை சுற்றிப்பார்க்க சென்ற காற்பந்துக் குழுவினரை காணாததையடுத்து போலிசார், ராணுவம் உட்பட பலர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி

