டெக்சஸ் ராணுவத் தளங்களில் குடியேறிகள் தங்குதற்கு ஏற்பாடு

டெக்சஸ் ராணுவத் தளங்களில் குடியேறிகள் தங்குதற்கு ஏற்பாடு

1 mins read
31cdb8ae-8260-40b2-b93d-76b0fc4c2810
-

சட்டவிரோதமாக அமெரிக்கா விற்குள் நுழையும் குடியேறிகளை டெக்சஸ் மாநிலத்திலுள்ள இரு ராணுவத் தளங்களில் தங்க வைப் பதற்காக ஏற்பாடுகளை அமெரிக்க ராணுவம் செய்து வருவதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் குடிநுழைவுக் கொள்கைக்கு அமெரிக்க ராணு வத்தின் ஆதரவு அதிகரித்து வருவதற்கான ஆகக் கடைசி அறிகுறியாக இது கருதப் படுகிறது. டெக்சஸில் உள்ள ஒரு ராணுவத் தளத்தில் குடியேறிகளும் மற்றொரு தளத்தில் குழந்தைகளும் தங்க வைக்கப்படுவர் என்று எதிர் பார்க்கப்படுவதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.

சட்டவிரோதக் குடியேறிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா- மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக் காவுக்குள் நுழையும் குடியேறி களைக் கைது செய்யவும் அவர்களின் குழந்தைகளை அவர் களிடமிருந்து பிரித்து வேறு ஓரிடத்தில் வைக்கவும் திரு டிரம்ப் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.

அமெரிக்காவில் அடைக்கலம் புகும் எண்ணத்துடன் மெக்சிகோ எல்லையைக் கடக்க முயன்ற ஹோண்டுராஸ் குடும்பத்தினரை அமெரிக்க சுங்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்ததைத் தொடர்ந்து அவர்கள் எல்லை ஓரமாக உள்ள ஒரு பாலத்திற்கு அருகே அன்றைய இரவுப் பொழுதைக் கழித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்