நஜிப் வீடுகளில் சோதனை: $300 மில்லியன் மதிப்புள்ள பணம், பொருட்கள் சிக்கின

நஜிப் வீடுகளில் சோதனை: $300 மில்லியன் மதிப்புள்ள பணம், பொருட்கள் சிக்கின

1 mins read
7a51ecc5-23a6-45ba-8554-83d04243c3f9
-

மலேசியப் பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட நஜிப் ரசாக்குடன் தொடர்புடைய ஆறு வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், பொருட்களின் மதிப்பு 900 மில் லியன் ரிங்கிட்டுக்கும் ($304 மில் லியன்) 1.1 பில்லியன் ரிங்கிட்டுக் கும் ($371 மில்லியன்) இடைப்பட்ட தாக இருக்கும் என மலேசிய போலிசின் வர்த்தகக் குற்றப் புல னாய்வுப் பிரிவுத் தலைவர் அமர் சிங் இஷார் சிங் தெரிவித்துள்ளார். மலேசியா வரலாற்றிலேயே இவ் வளவு அதிகமான மதிப்புடைய பொருட்களை போலிசார் கைப்பற்றி இருப்பது இதுவே முதல்முறை என்றார் அவர்.

35 மூட்டைகளில் கட்டப்படும் அளவுக்கு ரொக்கப் பணம் இருந் தது. அவற்றின் மதிப்பு 116.7 மில்லியன் ரிங்கிட் என்று நேற்றுக் காலை செய்தியாளர்களிடம் திரு சிங் தெரிவித்தார். 1எம்டிபி நிதி முறைகேடு தொடர்பாக ஆறு வீடுகளில் நடத் தப்பட்ட சோதனையில் பெரிய அளவிலான 72 சரக்கு மூட்டைகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவற்றுள் 25 மூட்டைகளில் தங்க, வைர நகைகள் இருந்ததாகவும் அவர் சொன்னார்.

பணத்தையும் பொருட்களையும் எண்ணி முடிக்க 36 நாட்கள் ஆனதாகக் குறிப்பிட்ட திரு சிங், 150 போலிஸ் அதிகாரிகள் அடங் கிய எட்டு சிறப்புக் குழுக்களும் நகை வடிவமைப்பு நிபுணர்களும் அதில் ஈடுபட்டதாகத் தெரிவித் தார்.

கைப்பற்றப்பட்ட நகைகளின் ஒரு பகுதி புகைப்படமாகக் காட்டப்பட்டது. ரொக்கப் பணம், நகைகள், கைப் பைகள், கைக் கடிகாரங்கள், கண்ணாடிகள் அனைத்தும் மத்திய வங்கியில் வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறினர். படம்: ராய்ட்டர்ஸ்