ஜக்கார்த்தா: உலகின் மூன்றாவது ஆகப் பெரிய ஜனநாயக நாடும் ஆக அதிகமான முஸ்லிம்கள் வாழும் நாடான இந்தோனீசியாவில் நடைபெற்று வரும் வட்டார தேர் தல்களில் அந்நாட்டின் மில்லியன் கணக்கான மக்கள் நேற்று வாக்க ளிக்க தொடங்கினர். இந்தோனீசியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடா ளுமன்ற, அதிபர் தேர்தல்களுக்கு முன்னோட்டமாக, நகர மேயர்கள், மாநில ஆளுநர்களுக்கான இந்த வட்டாரத் தேர்தல்கள் விளங்கும்.
இந்நிலையில், அந்நாட்டின் தீவிர வாத இஸ்லாமியத் தலைவர்கள் சிலர், அதிபர் ஜோக்கோ விடோ டோ பதவி விலக வேண்டும் என்று வெளிப்படையாக குரல் கொடுத்து வருகின்றனர். இரண்டாவது தவணையாக அதிபர் பதவி வகிக்க விரும்பும் திரு விடோடோ, இந்தோனீசி யாவின் பாரம்பரியமான பன்முகத்த ன்மையையும் மிதவாத இஸ்லாத் தையும் பாதுகாப்பதாக உறுதி அளித்துள்ளார்.
ரஷ்யாவில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்று வரும் வேளையில் இந்தோனீசியாவில் வாக்காளர்களை ஈர்க்கும் வண்ணம் வாக்குச்சாவடிகள் காற்பந்து கருப்பொருளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளன. படம்: ஏஎஃப்பி

