'அணுவாயுதக் களைவுப் பிரச்சினை: ஜப்பான் தலையிடக்கூடாது'

'அணுவாயுதக் களைவுப் பிரச்சினை: ஜப்பான் தலையிடக்கூடாது'

1 mins read

ஜனிவா: வடகொரியா அதன் அணுவாயுதக் களைவு விவகாரத் தில் ஜப்பான் தலையிட வேண்டாம் என மீண்டும் எச்சரித்துள்ளது. தென்கொரியா, அமெரிக்கா உட னான வடகொரியாவின் அண் மைய உச்சநிலை உடன்பாடுகளில் தோக்கியோவிற்கு எவ்வித தொடர்பும் கிடையாது என வடகொரியா கூறியதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது. சுவிட்சர்லாந்தின் ஜனிவாவை தளமாகக் கொண்டுள்ள ஐநாவுக் கான வடகொரிய தூதரான திரு ஜூ யோங் சோல், அந்நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற அணு வாயுதக் களைவு தொடர்பிலான மாநாடு ஒன்றில் இதனைத் தெரி வித்தார்.

அணுவாயுதங்களைக் களைவது உட்பட அமெரிக்காவுடனான உடன்படிக்கைகளை வடகொரியா சிரத்தையுடன் நடைமுறைப்படுத்து மாறு ஐநாவுக்கான ஜப்பானிய குழு அதே மாநாட்டில் கூறியதைத் தொடர்ந்து திரு ஜூ இவ்வாறு கருத்துரைத்ததாக யோன்ஹாப் குறிப்பிட்டது. மேலும், அணுவாயுதக் களைவு விவகாரம் தொடர்பில் தென் கொரியாவுடனும் அமெரிக்கா உடனும் வடகொரியா ஒத்துழை ப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும் அந்த ஜப்பானிய குழு வலியுறுத்தி இருந்தது.