1எம்டிபி விசாரணைக்கு உதவ மலேசியாவுக்கு திரும்பினார் ஜஸ்டோ

1 mins read

பெட்டாலிங் ஜயா: மலேசியாவின் 1எம்டிபி விவகாரம் மீதான விசாரணைக்கு உதவ சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சேவியர் ஆண்ட்ரே ஜஸ்டோ மூன்றாவது முறையாக மலேசியாவுக்கு திரும்பியுள்ளார். மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று முன்தினம் அவரிடம் ஐந்து மணிநேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டது. 1எம்டிபி விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் மலேசிய அதிகாரிகள், மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சூரும் 1எம்டிபி நிதியிலிருந்து அளவுக்கு அதிகமான பணத்தையும் சொத்தையும் பெற்றதாக குறிப்பிட்டிருந்தனர்.

நீதிமன்ற விசாரணையில் சாட்சியம் அளிப்பது உட்பட சாத்தியம் உள்ள அனைத்து வழிகளிலும் மலேசியாவிற்கு உதவ தாம் தயார் என ஏற்கெனவே 1எம்டிபி விவகாரம் தொடர்பில் ரகசியத் தகவல் அளித்திருந்த ஜஸ்டோ உறுதி அளித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 'பெட்ரோசவூதி இன்டர்நேஷனல்' அமைப்பில் நிகழ்ந்த ஏராளமான சம்பவங்கள் இன்னும் தமது மனதில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.