டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக 17 அமெரிக்க மாநிலங்கள் வழக்கு

1 mins read

சியேட்டல்: பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அகதிகளின் குடும்பங்களை பிரிக்கும் முடிவை எடுத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக 17 அமெரிக்க மாநிலங்கள் வழக்குத் தொடுத்து உள்ளன. டிரம்பின் இந்த முடிவை "கொடூரமானது மற்றும் சட்டவிரோதமானது" எனவும் அவை விமர்சித்துள்ளன. வா‌ஷிங்டன், நியூயார்க் மற்றும் கலிஃபோர்னியா உள்ளிட்ட 17 மாநிலங்கள் இந்த வழக்கைத் தொடுத்துள்ளன. இந்நிலையில், அமெரிக்க எல்லையில் குடும்பத்திடம் இருந்து பிரிக்கப்பட்ட ஆவணங்கள் இல்லாத அகதிக் குழந்தைகளை 30 நாட்களுக்குள் குடும்பத்துடன் ஒன்றுசேர்க்க வேண்டும் என அமெரிக்க கூட்டரசு நீதிபதி ஒருவர் உத்தரவிட்டுள்ளார்.