சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும் இளையர்களிடம் தேசிய பற்றை வளர்க்கவும் தேசிய சேவைத் திட்டத்தை மறுஆய்வு செய்ய மலேசியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் திட்டமிடுகின்றன. மலேசியாவில் முழுமையான மறுஆய்வு செய்யப்படவிருக்கும் துறை தேசிய சேவை என்று தற் காப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய சேவையை ஒட்டுமொத்த மாக மாற்றுவது பற்றி நாடாளு மன்றத்தில் விவாதிக்கப்படும் என்று மலேசிய தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு நேற்று சேனல் நியூஸ் ஏஷியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மலேசியாவில், குறிப்பிட்ட முறையில்லாமல் தேர்ந்தெடுக்கப் படும் 18 வயதுடையவர்களுக்கு தேசிய சேவை கட்டாயமாக இருந்தது. பின் 2016ல் அது விருப்பத் திட்டமாக்கப்பட்டது. "ஒருவேளை பாடத்திட்டத்தை மாற்றலாம். அனைத்து இனங்களை யும் சேர்ந்த இளையர்களும் இத் திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறோம். "இளைய தலைமுறையினர் நாட்டுப்பற்று உடையவர்களாக இருக்க தேசிய சேவை முக்கியம். அப்போதுதான் அவர்கள் நாட்டை நேசிப்பார்கள். அவர் களுக்கு உயர்ந்த குடிமைப் பண்பு தேவை. அதை அவர்கள் தேசிய சேவை மூலம் பெறலாம்," என்றார் அமைச்சர் முகமட் சாபு.

