அம்னோ வங்கிக் கணக்குகள் அதிரடியாக முடக்கம்

அம்னோ வங்கிக் கணக்குகள் அதிரடியாக முடக்கம்

1 mins read
a60ee458-8d02-410f-9ab8-10a8257ce35e
-

ஜோகூர் பாரு: மலேசியாவின் அம்னோ கட்சியின் வங்கிக் கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) முடக்கிவிட்டதாக அம்னோ துணைத் தலைவர் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். அம்னோ தலைமையகம், சிலாங்கூர் அம்னோ பிரிவு ஆகியவற்றின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட் டுள்ளதாக திரு ஸாஹிட் ஹமிடி கூறினார். அம்னோ கணக்குகள் முடக்கம் பற்றி ஊழல் தடுப்பு ஆணையம் தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்த தாக திரு ஸாஹிட் கூறினார். "கூடிய விரைவில் ஜோகூர் அம்னோ பிரிவின் வங்கி கணக்கையும் எம்ஏசிசி கண்டிப்பாக முடக்கக் கூடும்," என அம்னோவின் நோன்புப் பெருநாள் விருந்து உபசரிப்பில் உரையாற்றுகையில் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். படம்: THE STAR ASIA / NEWS NETWORK