பேங்காக்: தாய்லாந்தில் உள்ள ஒரு குகைக்குள் சிக்கிக்கொண்ட காற் பந்துக் குழு உறுப்பினர்கள் 12 பேர் மற்றும் பயிற்றுவிப்பாளரைத் தேடும் பணி தொடரும் வேளையில் அவர் களுக்கு உதவ அமெரிக்க ராணுவ வீரர்களும் பிரிட்டிஷ் முக்குளிப்பாளர் களும் அங்கு சென்றுள்ளனர். அந்த குகைக்குள் அதிகரித்து வரும் நீர் மட்டம் தேடும் பணிக்கு தடங்கலாக இருப்பதாகக் கூறப் படுகிறது. அந்த குகையின் நுழை வாயிலில் நீர் நிரம்பி இருப்பதால் குகைக்குள் நிரம்பியுள்ள நீரை வெளியேற்றும் பணியை முக்குளிப் பாளர்கள் நிறுத்தியுள்ளனர். காற் பந்துக் குழுவைச் சேர்ந்த 11 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்கள் அவர்களின் பயிற்றுவிப் பாளருடன் அந்த குகைக்குள் கடந்த சனிக்கிழமை நுழைந்தனர். அந்த குகைக்குள் எந்த இடத்தில் அவர்கள் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை.
தாய்லாந்து குகைக்குள் சிக்கிக்கொண்டவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள். தேடும் பணிக்கு உதவ பிரிட்டிஷ் முக்குளிப்பாளர்களும் அங்கு சென்றுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

