நஜிப்: பொருட்களின் மதிப்பு $300 மில்லியன் இருக்காது

நஜிப்: பொருட்களின் மதிப்பு $300 மில்லியன் இருக்காது

1 mins read
7dce3159-d0e9-46ae-81b2-2063424bc74b
-

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சொந்தமான பல வீடுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட விலை உயர்ந்த நகைகள், கைப்பைகள், கடிகாரங் கள் மற்றும் ரொக்கப் பணம் இவற்றின் மொத்த மதிப்பு 1.1 பில்லியன் ரிங்கிட் (S$304 மில்லியன்) என்று போலிசார் தெரிவித்துள்ள நிலையில் அதனை திரு நஜிப் மறுத்துள்ளார். கைப்பற்றப்பட்ட பொருட்களில் பெரும்பாலானவை தனக்கும் தன் மனைவிக்கும் அன்பளிப்பாக கிடைத்த பரிசுப் பொருட்கள் என்று திரு நஜிப் கூறியுள்ளார்.

தான் பிரதமராக இருந்தபோது வெளிநாட்டுத் தலைவர்களும் தனது சொந்த நண்பர்களும் பல பொருட்களை தங்களுக்கு பரிசுப் பொருட்களாக வழங்கியதாக திரு நஜிப் குறிப்பிட்டார். அத்துடன் போலிசார் கைப் பற்றிய பொருட்கள் குறிப்பாக நகைகளின் மதிப்பு அவ்வளவு இருக்காது என்றும் திரு நஜிப் கூறியுள்ளார். நகைகளில் பதிக்கப்பட்டுள்ள கற்களின் மதிப்பு, அந்த நகைகள் எப்போது பரிசாகக் கொடுக்கப் பட்டது, எப்போது அவற்றை வாங்கினார்கள் என்பதைப் பொறுத்து அந்த நகைகளின் மதிப்பு வேறுபடும் என்று அவர் கூறியுள்ளார்.