இந்தோனீசிய அதிபர்- மகாதீர் இன்று சந்திப்பு

இந்தோனீசிய அதிபர்- மகாதீர் இன்று சந்திப்பு

1 mins read

ஜகார்த்தா: இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு நேற்று இந்தோனீசியா சென்று சேர்ந்த மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது இன்று இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவை சந்தித்துப் பேசவுள்ளார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு திரு மகாதீர் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனீசியாவுக்கு சென்றுள்ளார்.

திரு மகாதீருடன் அவர் மனைவி சிட்டி ஹஸ்மாவும் அரசாங்க அதிகாரிகளும் இந்தோனீசியா சென்றுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது. இருதரப்பு உறவு மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்திக்கொள்ள திரு மகாதீரின் இந்த வருகை உதவும் என்று நம்பப்படுகிறது. இந்தோனீசியாவில் உள்ள மலேசியர்களையும் திரு மகாதீர் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.