ரசிகர்கள் அதிர்ச்சி, கோபம், அழுகை

ரசிகர்கள் அதிர்ச்சி, கோபம், அழுகை

2 mins read
e3c5a162-98d0-435e-bc07-57c9e2aee486
-

ஒருபக்கம் 'குட்பை' என்ற முழக்கம், மறுபக்கம் அதிர்ச்சித் தோல்வி தந்த அமைதி என தங் கள் நாடு உலகக் கிண்ணக் காற் பந்துப் போட்டிகளிலிருந்து வெளி யேற நேரிட்டதை எண்ணி ஜெர்மானிய ரசிகர்கள் என்ன செய்வ- தென்று தெரியாமல் திணறினர். "உலகக்கிண்ணக் காற் பந்துக் கனவுகள் சிம்மசொப்பன மாக மாறியது," என்று தலைப்பிட்டு தி பில்டு நாளிதழ் செய்தி வெளியிட்டது.

தென்கொரியாவுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்- தின் இறுதியில் ஜெர்மனி 2-0 என தோற்கு முன்னரே இந்த அணி தேறாது என பல ஜெர் மானிய ரசி கர்கள் விளையாட்டரங்கைவிட்டு வெளியேறத் தொடங்கினர். அந்த ஆட்டத்தில் பல கோல் போடும் வாய்ப்புகளை வீணடித்த தோடல்லாமல் ஜெர்மன் அணி வீரர்களின் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை சிறிதும் இல்லை என்று கூறப் படுகிறது.

ஆட்டத்தின் இறுதிவரை காத்- திருந்த ஜெர்மானிய ரசிகர்கள் தென் கொரியா தனது இரண்டா- வது கோலுக்காக பந்தை யாரு மில்லா கோல் வலைக்குள் செலுத் தியவுடன் கேலியும் கிண்டலுமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஒலிவர் ஃபிஷ்ஷர் என்ற ஜெர்மனி நாட்டுச் சீருடையை அணிந்த ரசிகர் கடந்த 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்து வெற்றியாளர்களான தனது நாட்டைக் குறிப்பிட்டு, "இவர்கள் உலகக் கிண்ண வெற்றியாளர்கள் இல்லை, ஏனெனில் இவர்கள் போராடவே இல்லை," என கோபத்துடன் கூறியதுடன், "இவர்கள் போட்டிகளில் இருந்து வெளியேற வேண்டியவர்- கள்தான். இவர்களிடம் போராடும் குணம், தைரியம், வெற்றி பெறுவதற்கான சிந்தனை என எதுவும் இல்லை," என்று பொறுமினார்.