பேங்காக்: தாய்லாந்தில் உள்ள ஒரு குகைக்குள் கடந்த ஒரு வாரமாக சிக்கியுள்ள 16 இளையர் களையும் பயிற்றுவிப்பாளரையும் மீட்க ராணுவம், போலிசார், தொண்டூழியர்கள் ஆகியோருடன் சேர்ந்து மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அந்த குகைக்குள் நுழையக் கூடிய புதிய வழிகளைக் கண்டறிய நவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த குகைக்குள் நிரம்பியுள்ள நீர்மட்ட அளவு மற்றும் அந்தக் குகை நிலவரம் பற்றிய தகவல் களை அறிந்துகொள்ள நீருக்கடி யில் செல்லும் ரோபோட் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மீட்புக் குழுவினர் கூறினர்.
அத்துடன் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குகைக்குள் செல்வதற்காக தோண்டுதல் பணியும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தாம் லுவாங் நாங் நன் குகைக்குள் மிக ஆழமான பகுதிக்குச் செல்லும் வழியை கண்டறியும் பணியில் தாய்லாந்து கடற்படை முக்குளிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த நான்கு முக்குளிப்பாளர்களும் அமெரிக்க ராணுவ வீரர்களும் மீட்புக் குழுவினருக்கு உதவி வருகின்றனர்.
நீர் நிரம்பிய குகைக்குள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள முக்குளிப்பாளர்கள். படம்: ஏஎஃப்பி

