லங்காவி: தேசிய பாதுகாப்பு மன்ற சட்டம் உட்பட பல சட்டங்களில் சாத்தியமான திருத்தங்களைச் செய்யலாமா அல்லது நீக்கலாமா என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்று பிரதமர் மகாதீர் நேற்று தெரிவித் தார். முன்னைய அரசாங்கம் இத் தகைய சில சட்டங்களைப் பயன் படுத்தி மக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தியதால் பரிசீலனைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற் பட்டுள்ளது என்று அவர் சொன் னார். "பெரும்பாலான சட்டங்கள் மக்கள் சுதந்திரமாக பேசுவதை தடுக்கிறது. பத்திரிகை சுதந் திரத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் குறிப்பிட்ட சில சட்டங்களில் திருத்தம் செய் வதையும் நீக்குவதையும் குறித்து ஆராய்ந்து வருகிறோம்," என்றார் பிரதமர் மகாதீர். அண்மையில் பேசிய தற்காப்பு அமைச்சர் முஹமட் சாபு, பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் தேசிய பாதுகாப்பு மன்ற சட்டத்தை நீக்கு வோம் என்று பக்கத்தான் ஹரப் பான் வாக்குறுதி அளித்திருந் தாலும் அந்தச் சட்டம் தற்சமயம் அப்படியே நீடிக்கும் என்று கூறி யிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் டாக்டர் மகாதீர் பேசினார்.
லங்காவியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மகாதீர், முன்னைய அரசாங்கம் சில சட்டங்களைப் பயன்படுத்தி மக்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தியது என்று கூறினார். படம்: நியூஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இணையம்

