வாஷிங்டன்/ரியாத்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நேற்று வெளியிட்ட டுவிட்டர் தகவலில் எண்ணெய் உற்பத்தியை அதி கரிக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை சவூதி மன்னர் சல்மான் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். ஈரான், வெனிசுவேலா நாடுகளி லிருந்து விநியோகம் பாதிக்கப் பட்டுள்ளதால் அதை ஈடுகட்டும் வகையில் இரண்டு மில்லியன் பீப்பாய் அளவுக்கு எண்ணெய் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று அதிபர் டோனல்ட் கேட்டுக் கொண்டார்.
"நான் இப்போதுதான் சவூதி அரேபிய மன்னர் சல்மானுடன் பேசினேன். ஈரான், வெனிசுவேலாவின் குழப்பமான சூழ்நிலையைப் பற்றி விளக்கினேன். அதனால் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் இரண்டு மில்லியன் பீப்பாய் அளவுக்கு உற்பத்தியை அதிகரிக்க மன்னரிடம் கேட்டுக் கொண்டேன். அதற்கு மன்னரும் ஒப்புக்கொண்டார்," என்று டுவிட் டர் பதிவில் திரு டிரம்ப் எழுதியிருந்தார். ஆனால் அவர் குறிப்பிட்ட பீப்பாய் எண்ணிக்கை ஒரு நாளைக் கானதா என்பது தெரிய வில்லை. இந்த தொலைபேசி உரையாடலின்போது அதிபர் டிரம்ப்பும் சவூதி மன்னர் சல்மானும் எண் ணெய் சந்தையை நிலையாக வைத்திருப்பது அவசியம் என்பதை ஒப்புக் கொண்டனர். உலகில் அதிக அளவில் எண் ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவூதி அரேபியாவால் நாளுக்கு அதிகபட்சமாக 12 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யை உற்பத்தி செய்ய முடியும்.
2017 மே 20ஆம் தேதி எடுக்கப்பட்ட படத்தில் அதிபர் டிரம்ப்பும் சவூதி அரேபிய மன்னர் சல்மானும் சந்தித்த காட்சி. கோப்புப் படம்: ஏஎஃப்பி

