கோலாலம்பூர்: தனது குடும்பத் தால் நடத்தப்படும் அறவாரியத் தின் நிதி தவறாக பயன்படுத்தப் பட்டதாக கூறப்படுவது குறித்த விசாரணைக்காக அம்னோ கட்சித் தலைவர் அஹமட் ஸாஹிட் ஹமிடி நேற்று காலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்குச் சென்றார். முன்னதாக, இரண்டு வழக்கு கள் தொடர்பான விசாரணைக் காக முன்னிலையாகுமாறு ஊழல் தடுப்பு ஆணையம் ஞாயிற்றுக் கிழமை கேட்டுக்கொண்டது.
இதற்கிடையே ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "என்னிடம் என்ன கேள்விகள் கேட்கப்படும் என்று தெரியவில்லை. ஆனால் ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்," என்றார். இதையடுத்து, விசாரணைக்கு வந்த அவர் அங்கு காத்திருந்த செய்தியாளர்களைப் புன்னகையு டன் நோக்கி கையசைத்தவாறு சென்றார்.
விசாரணைக்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்தார் அம்னோ கட்சித் தலைவர் ஸாஹிட். படம்: ஏஎஃப்பி

