மெக்சிகோ தேர்தல்: லோபஸ் வெற்றி, டிரம்ப் வாழ்த்து

மெக்சிகோ தேர்தல்: லோபஸ் வெற்றி, டிரம்ப் வாழ்த்து

1 mins read

மெக்சிகோ: மெக்சிகோ அதிபர் தேர்தலில் 64 வயது லோபஸ் ஆப்ரதோர் வெற்றி பெற்றார். தற்போதைய அதிபராக உள்ள பெனா நெய்டோ மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளதால் அவரது ஐஆர்பி கட்சி தோல்வியைத் தழுவும் எனக் கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதேபோல, வாக்கு எண்ணிக்கையில் அந்தக் கட்சி பின்தங்கியது. ஐஆர்பி கட்சியில் இருந்து பிரிந்து தேசிய மறுசீரமைப்பு இயக்கத்தைத் தொடங்கி, இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட லோபஸ் வெற்றி பெற்றார். 53 விழுக்காடு வாக்குகள் பெற்ற அவர் முதலிடம் பிடித்து அதிபராகிறார். மெக்சிகோவைக் கடந்த ஓர் நூற்றாண்டாக ஆண்டுள்ள இரு கட்சிகளைத் தோற்கடித்தவர் என்ற வரலாற்று சாதனையை லோபஸ் ஆப்ரதோர் படைத்துள்ளார். இவரது வெற்றிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து கூறியுள்ளார். எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரிகார்டோ அனாயா 23% வாக்குகளுடன் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.