வடகொரிய அணுவாயுதங்களை ஓராண்டிற்குள் அழிக்கலாம்: அமெரிக்கா நம்பிக்கை

வடகொரிய அணுவாயுதங்களை ஓராண்டிற்குள் அழிக்கலாம்: அமெரிக்கா நம்பிக்கை

1 mins read

வா‌ஷிங்டன்: வடகொரிய அணுவா யுத திட்டங்களை ஓராண்டிற்குள் அழித்துவிடலாம் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார் அமெ ரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன். அணுவாயுத திட்டங்களை அழிக்க நெடுங்காலம் பிடிக்கும் என்று சில வல்லுநர்கள் கூறி வந்த நிலையில் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த ஜான் இவ்வாறு கூறியுள் ளார். வடகொரியாவின் ரசாயன ஆயுதங்கள், உயிரியல் ஆயுதங் கள், அணுவாயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்ளிட்டவற்றை ஓராண்டிற்குள் அழிக்க அமெரிக்கா திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக அவர் சொன்னார். அதற்கு வடகொரியாவும் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக, மைக் பொம்பியோ விரைவில் வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என அவர் கூறினார். பொம்பியோ அடுத்த வாரம் வட கொரியா செல்லக்கூடும் என்று தி பைனான்சியல் டைம்ஸ் செய்தி கூறினாலும் அமெரிக்கா தரப்பில் எதுவும் உறுதி செய்யப் படவில்லை.