மலேசியா: செலவைக் குறைத்தால் தான் ரயில் திட்டம் தொடரப்படும்

மலேசியா: செலவைக் குறைத்தால் தான் ரயில் திட்டம் தொடரப்படும்

1 mins read

கோலாலம்பூர்: கிழக்குக் கடற்கரை ரயில் தட திட்டத்திற்கான செலவை சீன நிறுவனம் பெருமளவு குறைத்தால் மட்டுமே அதனைத் தொடர முடியும் என்று மலேசியா கூறியுள்ளது. சுமார் 81 பில்லியன் ரிங்கிட் (S$27.4 பில்லியன்) மதிப்பிலான இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முந்திய மலேசிய அரசாங்கம் சீன கட்டுமான நிறுவனம் ஒன் றோடு ஒப்பந்தம் போட்டு அதற்கான பணிகளும் நடந்து வந்தன. இந்நிலையில் பேசிய மலேசிய நிதி அமைச்சர் லிம் குவான் எங், "கிழக்குக் கடற்கரை ரயில் தட திட்டத்திற்கான செலவு பெருமளவு குறைக்கப்பட்டால்தான் அது பொருளாதார ரீதியில் சாத்தியப்படும்," என்றார்.

செலவைக் குறைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் களோடு அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அவர் சொன்னார். "இந்த ரயில் தட திட்ட கட்டு மானத்திற்காக இதுவரை கிட்ட தட்ட 20 பில்லியன் ரிங்கிட் செல விடப்பட்டு உள்ளது. "ஒருவேளை இத்திட்டம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டால் முன்பணத்தைத் திருப்பியளிக்கும் ஒப்பந்தப்படி 10.2 பில்லியன் ரிங்கிட் பணத்தை மீட்டுவிடலாம்," என்றார். சிலாங்கூரின் கலாங் துறை முகத்தையும் கிளாந்தானில் உள்ள பெங்காலான் குபோர் என்ற இடத் தையும் இணைக்கும் வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு முன் னாள் பிரதமர் நஜிப்பின் அரசாங் கம் இத்திட்டத்திற்கான ஒப்பந் தத்தை மேற்கொண்டது.