தொலைத்தொடர்புத் துறையில் நுழைய விரும்பிய சீனாவிற்கு அமெரிக்கா மறுப்பு

தொலைத்தொடர்புத் துறையில் நுழைய விரும்பிய சீனாவிற்கு அமெரிக்கா மறுப்பு

1 mins read
0f824faa-bbd2-426c-903b-cf10f362097a
-

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் தொலைத்தொடர்புத் துறையில் கால் பதிக்க விரும்பிய சீன நிறு வனத்திற்கு உரிமம் வழங்கத் தடை விதிப்பது குறித்து வெள்ளை மாளிகை பரிசீலித்து வருவதாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு குறித்த கவலையே இதற்குக் கார ணம் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கைத் தொலைபேசி, தொலைத்தொடர்புச் சேவை வழங்க விரும்பிய 'சைனா மொபைல்' நிறுவனம் கடந்த 2011ஆம் ஆண்டு அதற்காக விண் ணப் பம் செய்திருந்தது.

இந்நிலையில், சீனாவின் இந்த விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு மத்திய தொடர்பு ஆணையத்திற்கு அமெரிக்க தொலைத்தொடர்பு, தகவல் நிர்வாகம் பரிந்துரைத்து உள்ளது. "சீன அரசாங்கத்தின் கட்டுப் பாட்டில் செயல்பட வாய்ப்புள்ள 'சைனா மொபைல்' நிறுவனத்திற்கு அனுமதி அளித்தால், அது நாட் டின் பாதுகாப்பிற்கும் சட்ட அம லாக்க முறைகளுக்கும் ஆபத்தாகி விடும்," என்று தொலைத் தொடர்பு துறையின் அறிக்கையில் கூறப் பட்டு உள்ளது. அமெரிக்காவை சீனா வேவு பார்ப்பது அதிகரித்துவிடும் என் றும் கூறப்படுகிறது. அரசாங்கம் 'சைனா மொபைல்' கட்டமைப்புச் சேவையைப் பயன் படுத்தவில்லை என்றாலும் மற்ற நாடுகளுடனான அமெரிக்காவின் தகவல் தொடர்பை அவர்கள் வேவு பார்க்கக்கூடும் என்றும் அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இது குறித்து சைனா மொபைல் நிறுவனமோ, அமெரிக் காவின் மத்திய தொடர்பு ஆணையமோ எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

மேலும் செய்திகள்