இந்தோனீசிய படகு விபத்தில் குறைந்தது 29 பேர் மரணம்

இந்தோனீசிய படகு விபத்தில் குறைந்தது 29 பேர் மரணம்

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுலவேசி தீவுக்கருகே ஒரு படகு மூழ்கியதில் குறைந்தது 29 பேர் உயிரிழந்ததாகவும் விபத்தில் காணாமற்போனவர்களைத் தேடும் பணி தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகில் சென்றவர்களில் 69 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இன்னும் 41 பேரைக் காணவில்லை என்று இந்தோனீசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தோனீசியப் படகு ஒன்று டோபா ஏரியில் மூழ்கியதில் பலர் உயிரிழந்தனர். அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றப்பட்டிருந்ததால் படகு மூழ்கியதாக அதிகாரிகள் கூறினர்.