அரிசோனா: அமெரிக்காவில் 92 வயது மூதாட்டி ஒருவர் தனது 72 வயது மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். முதியோர் பராமரிப்பு இல்லத்திற்கு தன்னை அனுப்ப தன் மகன் திட்டமிட்டிருந்ததால் அந்தக் கொலையை செய்ததாக ஃபினிக்ஸ் நகரைச் சேர்ந்த அன்னா மே பிலெஸிங் என்ற அந்த மூதாட்டி கூறியுள்ளார். தன் மகன் தன்னுடன் ஒரே வீட்டில் வாழ சிரமப்பட்டதால் தன்னை முதியோர் இல்லத்தில் சேர்க்க தன் மகன் முடிவு எடுத்ததாக அந்த மூதாட்டி கூறினார். இரு கைத்துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்த மூதாட்டி, சம்பவத்திற்குப் பின் தன்னையே சுட்டுக்கொல்ல திட்டமிட்டிருந்ததாகவும் போலிசாரிடம் கூறினார். 500,000 அமெரிக்க டாலர் பிணைத் தொகையை செலுத்த முடியாத காரணத்தால் அந்த மூதாட்டி காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற அதிகாரிகள் கூறினர்.
முதியோர் இல்லத்தில் சேர்க்க முயன்ற மகனை சுட்டுக் கொன்ற தாய்
1 mins read

