நஜிப்பிற்காக நிதி திரட்டும் இயக்கம்

நஜிப்பிற்காக நிதி திரட்டும் இயக்கம்

1 mins read

பெட்டாலிங் ஜெயா: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்பிற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிர்ணயித்த 1 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகையை செலுத்த நிதி திரட்டும் வகையில் அவரது ஆதரவாளர்கள் இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளனர். 1 மில்லியன் ரிங்கிட் பிணை உத்தரவாதத்தில் விடுதலை செய்யப்பட்ட திரு நஜிப்பால் 500,000 ரிங்கிட் மட்டுமே செலுத்த முடிந்தது. மீதமுள்ள 500,000 ரிங்கிட் தொகையை திரு நஜிப் வரும் 9ஆம் தேதி செலுத்த வேண்டும். ஒரு வேளை மீதமுள்ள தொகையை செலுத்த முடியாமல் போனால் திரு நஜிப் அவரது வீட்டை ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக ஆதரவாளர்களின் பேச்சாளர் ரஸ்லான் முகமட் ரஃபி தெரிவித்தார். ஆகையால், நஜிப்பிற்கு நிதி ஆதரவு அளிக்கும் வகையில் இந்த நிதி திரட்டும் இயக்கம் அறிமுகப்படுத்த உள்ளது என முன்னாள் கூட்டரசு பிரதேச அம்னோ இளைஞர் பிரிவு தலைவருமான அவர் கூறினார். 1எம்டிபி தொடர்பில் நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.