பிரிட்டனில் தம்பதியர் மீது மீண்டும் ஒரு நச்சுத் தாக்குதல்

பிரிட்டனில் தம்பதியர் மீது மீண்டும் ஒரு நச்சுத் தாக்குதல்

1 mins read

லண்டன்: பிரிட்டனின் தென் மேற்குப் பகுதியில் உள்ள வில்ட்ஷெர் பகுதியில் ஓர் ஆடவரும் ஒரு பெண்ணும் சுயநினைவிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். கடந்த சனிக்கிழமை 45 வயது சார்லி ரோவ்லேவும் 44 வயது டான் ஸ்டர்கெசும் அமெஸ்பரியில் உள்ள அவர்களின் வீட்டில் மயக்கமுற்ற நிலையில் காணப் பட்டதாக பிரிட்டிஷ் போலிசார் கூறினர். அத்தம்பதியருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவ தாகவும் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. அவ்விருவரும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகி யிருக்கலாம் என்று போலிசார் கருதுகின்றனர். முன்னாள் ரஷ்ய உளவாளி ஸ்கிரிபால் மீதும் அவரது மகள் யூலியா மீதும் பயன்படுத்தப்பட்ட 'நோவிச்சோக்' என்ற அதே நச்சுப் பொருள் இத்தம்பதியர் மீது பயன்படுத்தி இருக்கலாம் என்பதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்று போலிஸ் உதவி ஆணையாளர் நெயில் பாசு தெரிவித்திருக்கிறார்.