நஜிப்பின் வளர்ப்பு மகனிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை

நஜிப்பின் வளர்ப்பு மகனிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை

1 mins read

புத்ராஜெயா: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வளர்ப்பு மகனான ரிசா அஸிஸிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். நேற்று மூன்றாவது நாளாக ரிசா, ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வந்திருந்ததாக தகவல்கள் கூறின. 1எம்டிபி நிறுவனத்தின் நிதி முறைகேடு தொடர்பில் அவரை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். 1எம்டிபி நிதி விவகாரம் தொடர்பில் திரு நஜிப் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள வேளையில் அவரது வளர்ப்பு மகனிடம் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.