வாஷிங்டன்: வடகொரியா சென்றுள்ள அமெரிக்க வெளி யுறவு அமைச்சர் மைக் போம்பியோ, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை பியோங்யாங்கில் சந்தித்துப் பேசி யுள்ளார். திரு கிம்முக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் இடையே, சிங்கப்பூரில் நடந்த உச்சநிலை சந்திப்பை அடுத்து இது இடம் பெறுகிறது. சிங்கப்பூரில் நடந்த சந்திப்புக்குப் பிறகு, அணுவாயுத மிரட்டல் முடிந்துவிட்டதாகத் திரு டிரம்ப் கூறி வந்தார். ஆனால் அவரும் திரு கிம்மும் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசிய போது கையெழுத்திட்ட உடன் பாட்டில் எந்த தெளிவான கடப் பாடுகளும் குறிப்பிடப்பட வில்லை. அந்தக் கடப்பாடுகள் குறித்த மேல் விவரங்களை அறிந்து கொள்ளவே வட கொரியா சென்றுள்ளதாக திரு போம்பியோ செய்தியாளர் களிடம் தெரிவித்தார். வடகொரியாவில் திரு போம்பியோயை, திரு கிம்மின் முக்கிய உதவியாளரான கிம் யோங் சோலும் வெளியுறவு அமைச்சர் ரீ யோங் ஹோவும் வரவேற்றனர்.
வடகொரியா சென்றுள்ள அமெரிக்க அமைச்சர்
1 mins read

