கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தன்னை மலேசியாவின் தற்போதைய பிரதமர் மகாதீர் முகம்மது வெறுக்கத் தொடங்கியதற்கான காரணங்களுள் '1 மலேசியா' திட்டமும் ஒன்று என்று கூறியுள் ளார். தங்கள் இருவருக்கும் இடையில் உறவு பாதிக்கப்பட்டதற்கான காரணங்களை திரு நஜிப் மலேசியா கினிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தனது திட்டங்களும் கொள்கை முடிவுகளும் திரு மகாதீருக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும் திரு நஜிப் கூறினார். "பிரதமராக நான் பொறுப்பேற்ற பிறகு ஆரம்ப காலத்திலும் 2009ஆம் ஆண்டுக்கு அப்பாலும் எங் களுக்கு இடையில் நல்ல நட்பு இருந்து வந்தது," என்று திரு நஜிப் கூறினார். மகாதீர் அறிவிப்பு இதற்கிடையே மலேசியப் பிரதமர் மகாதீர், தீவிரவாதப் போக்குடைய சர்ச்சைக்குரிய இந்திய சமய போதகர் ஸாகிர் நயிக் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படமாட்டார் என்று கூறியுள்ளார்.
நஜிப்: என்னை மகாதீர் வெறுக்கத் தொடங்கியதற்கான காரணங்கள்
1 mins read

