டோமியை தகுதி நீக்கம் செய்ய நஜிப் விண்ணப்பம்

டோமியை தகுதி நீக்கம் செய்ய நஜிப் விண்ணப்பம்

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான வழக்கில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி டோமி தாமஸை தகுதி நீக்கம் செய்யக் கோரி திரு நஜிப் விரைவில் உயர் நீதிமன்றத்தில் முறையாக விண்ணப்பம் செய்யவிருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். இன்னும் இரண்டு வாரத்திற் குள் அந்த மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவிருப்பதாக திரு நஜிப்பின் வழக்கறிஞர் குழுத் தலைவர் ஷஃபி அப்துல்லா தெரி வித்துள்ளார்.

"அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் குழுவுக்கு டோமி தாமஸ் தலைமை ஏற்க வேண்டாம் என நாங்கள் கேட்டுக்கொள்வதற்கான தகுந்த காரணங்களை நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும். இதனால் நஜிப் மீது குற்றம் சாட்டப்படுவதற்கு முன்பு அவரைப் பற்றி திரு டோமி தாமஸ் வெளியிட்ட அனைத்து அறிக்கைகளையும் சேகரித்து வருகிறோம்," என வழக்கறிஞர் ஷஃபி கூறியதாக ஸ்டார் தகவல் தெரிவித்தது. திரு டோமி தாமஸை தகுதி நீக்கம் செய்யக்கோரி நீதிமன்றத் தில் மனு செய்வதற்குத் தேவையான அனைத்து தகவல் களையும் திரட்ட தமது குழு வினருக்கு சில நாட்கள் தேவைப் படுவதாகவும் அவர் சொன்னார்.