புத்ராஜெயா: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எதிராக தற்போதைய மலேசிய அரசாங்கம் பழிவாங்கும் செயலில் ஈடுபடவில்லை என்று மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது கூறியுள்ளார். திரு நஜிப்பின் குடும்பத்தினர் அவர்களின் கவலையை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது என்றும் திரு மகாதீர் கூறினார். திரு நஜிப் பும் அவரது குடும்பத்தினரும் அவருக்கு எதிராக அரசாங்கம் பழிவாங்கும் செயலில் ஈடுபடுவ தாக நினைத்தால் இந்த விவ காரத்தை அவர்கள் நீதிமன்றத் திற்கு கொண்டு செல்லலாம் என்று திரு மகாதீர் புத்ராஜெயாவில் செய்தியாளர் களிடம் கூறினார்.
திரு நஜிப் இதற்கு முன்பு செய்தது மோசமான காரியம் என்று கூறிய திரு மகாதீர், "அதுபற்றி நாங்கள் புகார்கூட செய்யவில்லை," என்று கூறினார். இதற்கிடையே திரு நஜிப்பின் மகள் நூராய்னியின் வங்கிக் கணக்கும் அவரது மகனின் வங்கிக் கணக்கும் முடக்கப் பட்டதாக தகவல் வெளியானது. நூராய்னியின் மகனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக வெளியான தகவலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

