அமெரிக்காவில் கேன்சஸ் சிட்டியில் இருக்கும் உணவகம் ஒன்றில் இன்னா ரென்று தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டதில் தெலுங்கானாவைச் சேர்ந்த 26 வயது மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார். ஷரத் கொப்பு என்ற அந்த மாணவர், அந்த நகரில் படித்துவந்தார். உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை சுமார் 7 மணிக்கு அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகத் தகவல்கள் கூறின. அவர் உடலில் ஐந்து துப்பாக்கிக்குண்டு காயங்கள் ஏற்பட்டதாகவும் உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட் டாலும் பலனில்லை என்றும் கொப்புவின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே, கேன்சஸ் சிட்டி போலி சார் சந்தேகப்பேர்வழியைக் காட்டும் பிரத் தியேக காணொளி ஒன்றை வெளியிட்ட னர். அச்சம்பவம் கொள்ளைச் சம்பவம் என்று தெரிவித்த போலிஸ், குற்றவாளி யைப் தேடிப் பிடிக்கும் வேட்டை தொடங் கப்பட்டு இருப்பதாகவும் அறிவித்தது. துப்பாக்கிக்காரன் உணவகத்தில் நுழைந்து துப்பாக்கியை வெளியே எடுத்த தைப் பார்த்த ஊழியர்கள் உடனடியாக பதுங்கிக்கொண்டார்கள் என்றும் அப் போது கொப்பு எதிர்திசையில் ஓடத் தொடங்கினார் என்றும் அவரை துப்பாக்கிக்காரன் முதுகில் சுட்டுவிட்டான் என்றும் ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டன. இதனிடையே, தெலுங்கானாவில் இருக்கும் கொப்புவின் குடும்பத்தினர் அந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி யடைந்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தெலுங்கானா அமைச்சர் ராமா ராவ் ஆகியோரை அணுகி உள்ளனர். கேன்சஸில் சென்ற ஆண்டு இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா என்ற இந்திய கணினித் துறை ஊழியர் ஒருவர் மரணமடைந்தார்.
துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான தெலுங்கானாவைச் சேர்ந்த ஷரத் கொப்பு. படம்: இந்திய ஊடகம்

