கோலாலம்பூர்: மலேசியாவின் அடுத்த பொதுத்தேர்தலில் 18 வயதானவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படலாம். அந்நாட்டின் இளையர், விளையாட்டுத் துறை அமைச்சர் சையத் சாதிக் அப்துல் ரஹ்மான், வாக்களிக்கும் குறைந்தபட்ச வயது வரம்பை 18க்குக் குறைப்பதை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார். மலேசியாவில் தற்போது 21 வயதை அடைந்தவர்கள் சட்டப்படி வாக்களிக்கலாம். இந்நிலையில் மலேசிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஆக இளையரான 25 வயது சையத் சாதிக், வாக்களிக்கும் வயதை 21 இலிருந்து 18க்குக் குறைக்கும் சாத்தியம் பரிசீலிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மலேசியாவில் வாக்களிப்பு வயதை 18க்கு குறைக்க திட்டம்
1 mins read

