தாய்லாந்தின் தாம் லுவாங் குகையிலிருந்து மேலும் ஐவரை நேற்று மீட்டதை அடுத்து குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள், அவர்களது பயிற்று விப்பாளர் என 13 பேரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். நேற்று குகையிலிருந்து மீட்கப்பட்ட நான்கு சிறுவர்களும் அவர்களது பயிற்றுவிப்பாளரும் தூக்குப்படுக்கை மூலமாக குகைக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் சியாங் ராய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தாய்லாந்து-மியன்மார் எல் லைக்கு அருகில் அமைந்திருக்கும் இந்தக் குகைக்குள் சிக்கியிருந்த எஞ்சிய ஐவரை மீட்க, சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை 11.09 மணிக்கு 19 முக்குளிப்பாளர்கள் சென்றனர். குகைக்குள் சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அவர்களுடன் இருந்த ஒரு மருத்துவர், தாய்லாந்து கடற் படையைச் சேர்ந்த மூன்று முக்கு ளிப்பாளார்கள் ஆகியோர் இருந் தனர். சிறுவர்களையும் பயிற்று விப்பாளரையும் மீட்ட பிறகு இந்த நால்வரின் வரவுக்காகக் தாய் லாந்தின் கடற்படை முக்குளிப் பாளர்கள் காத்திருந்தனர்.
சியாங் ராயில் உள்ள ராணுவ விமானத் தளத்திலிருந்து கிளம்பிய அவசர வாகனத்தை அங்கு கூடியிருந்தோர் கையசைத்து வழியனுப்பி வைத்தனர். சியாங் ராயில் உள்ள ராணுவ விமானத் தளத்திலிருந்து கிளம்பிய அவசர வாகனத்தை அங்கு கூடியிருந்தோர் கையசைத்து வழியனுப்பி வைத்தனர். படங்கள்: ராய்ட்டர்ஸ்

