பிரிட்டிஷ் புதிய வெளியுறவு அமைச்சராக ஜெரேமே நியமனம்

1 mins read

லண்டன்: பிரிட்டனின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக ஜெரேமே ஹண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் சுகாதார அமைச்சராக பதவி வகித்து வந்த ஜெரேமே ஹண்ட் புதிய வெளியுறவு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலில் பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே கையெழுத்திட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகு வதற்கான விவகாரத்தில் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தி வந்த திரு போரிஸ் ஜான்சன் நேற்று பதவி விலகியதைத் தொடர்ந்து ஜெரேமே ஹண்ட் புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.