குகை: மீட்கப்பட்ட சிறுவர்கள் ஆரோக்கியமாக உள்ளனர்

குகை: மீட்கப்பட்ட சிறுவர்கள் ஆரோக்கியமாக உள்ளனர்

1 mins read
4cbce731-6be4-4f7c-a4bc-9b7e4351dc6a
-

பேங்காக்: தாய்லாந்தில் உள்ள ஒரு குகையிலிருந்து மீட்கப் பட்ட 13 பேரில் 8 சிறுவர்கள் உடல் நலத்துடன் இருப்பதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று மீட்கப்பட்ட 5 பேரின் உடல்நிலை பற்றி உடனடியாக அறிவிக்கப்படவில்லை. முதல் இரண்டு நாட்களில் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்து வமனையில் சேர்க்கப்பட்ட 8 சிறுவர்களுக்கு எக்ஸ்ரே, ரத்த சோதனை போன்ற மருத்துவ சோதனைகள் மேற் கொள்ளப்பட்டதில் யாருக்கும் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்றும் அவர்களின் உடல் நிலையும் மனநிலையும் நல்ல நிலையில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இரண்டு சிறுவர்களுக்கு மட்டும் நுரையீரல் அழற்சி பாதிப்புக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார். மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ள சிறுவர்களுக்கு முதலில் எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகள் கொடுக்கப் பட்டதாகவும் சில சிறுவர்களைப் பார்க்க அவர்களின் பெற்றோர் களுக்கு அனுமதி வழங்கப்பட்ட தாகவும் ஆனால் கண்ணாடி வழியாகவே அவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்க்க முடிந்தது என்றும் சுகாதார அதிகாரிகள் கூறினர்.

தாய்லாந்து குகையிலிருந்து ஆம்புலன்ஸ் வண்டி ஒன்று புறப்படுகிறது. படம்: ஏஎஃப்பி