தாய்லாந்து குகையில் சிக்கி யிருந்த காற்பந்துக் குழுவைச் சேர்ந்த 12 சிறுவர்களும் அவரது பயிற்றுவிப்பாளரும் செவ்வாய்க் கிழமை மீட்கப்பட்ட பிறகு ஆஸ் திரேலியாவைச் சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் ஹாரிஸ், 57, கடைசியாக குகையிலிருந்து வெளியே வந்தார். அப்போது அவரிடம் அவரது தந்தை இறந்த தகவல் தெரிவிக் கப்பட்டது. இதனை சற்றும் எதிர் பாராத ரிச்சர்ட் ஹாரிஸ் அதிர்ச் சியில் உறைந்துபோனார். குகையில் சிக்கியிருந்த சிறுவர்களின் உடல்நலனைப் பரி சோதித்து நல்ல நிலையில் வைத் திருப்பதற்காக அவர் குகைக்குள் சென்றிருந்தார். செவ்வாய்க்கிழமை அன்று எஞ்சிய சிறுவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் ரிச்சர்ட் ஹாரிஸின் தந்தை ஆஸ் திரேலியாவில் இறந்தார். ஆனால் ரிச்சர்ட் ஹாரிஸ் வெளியே வந்த பிறகே அவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மயக்க மருந்து நிபுணரும் முக்குளிப்பில் நல்ல அனுபவமும் பெற்ற ரிச்சர்ட் ஹாரிஸ் அடிலெய் டில் உள்ள தமது வீட்டுக்கு விரைவில் திரும்புவார் என்று நேற்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். திரு ரிச்சர்ட் ஹாரிசின் முத லாளியான ஆண்ட்ரு பீஸ், "குகை யிலிருந்து 13 பேரை விடுவிப்பதில் முக்கியப் பங்காற்றினார்," என்றார். ரிச்சர்ட் ஹாரிசின் தந்தை ஜேம்ஸ் ஹாரிசும் மருத்து வர். குயீன் எலிசபெத் மருத்துவ மனையில் மூத்த அறுவை சிகிச்சை நிபுணராக ஜேம்ஸ் ஹாரிஸ் பணியாற்றியிருந்தார்.

